பக்கம்:அவள்.pdf/439

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் ஒய்வதில்லை 9ே5 கிறது? வாழ்க்கையில் மேக் பிலீவ் இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். எப்படியேனும் பரஸ்பரம் ஆதரவு, துணை கிடைக்கணும். இந்த பரஸ்பரம் எங்கிருந்து கிடைத்தாலும் அதுவே கொடுப்பனை. வாழ்க்கைக்கு அர்த்தம் -அவர் மீண்டபோது, அவளும் மெளனமாயிருந் தாள். அவரைப் பார்க்கவில்லை. முகம் தரைமேல் தாழ்ந்து, அமைதியின் வளர்ப்பில், உள்நோக்கில், சலன மற்றுத் தெளிந்திருந்தது. இருவரும் என்னேரம் இந்த சமாதியில் இருந்தனரோ, ஒரே சம்புடத்தில் இரண்டு ஜின்டான் மாத்திரைகள். அதனதன் த னி ம ன ம் கமழ்ந்துகொண்டு, அதில் நிறைந்து... "பியூட்டிஃபுல்” வார்த்தை மூச்சாய் வந்தது. கண்கள் பனித்திருந்தன. "எனக்கு இப்படி இருந்ததில்லை.” நீண்ட பெருமூச்சு கிளம்பிற்று. உங்கள் வருகை எனக்கு ஆசீர்வாதம், அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். அவருக்கு சிவிர்த்தது. 'வரேன்.” பெருமூச்செறிந்தாள். கவலைப்படுவாங்க." 'கவலைப்பட அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும். 'வந்துட்டீங்களா அப்பா? இன்னேரம் எங்கே போயிருந் தீங்க'ன்னு அதட்ட, கொடுப்பனை வேணும். பாருங்க, நான் ஆபீசிலிருந்து வீடு திரும்பினால், இந்த நாலு சுவர் தான் பார்க்கணும்’ சிரித்தாள். 'நாளைக்கு வரேன்.' "நிச்சயமா?" 'அவசியம் வருவேன். அவளுக்காக அவர் மனம் பரிதவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/439&oldid=741811" இருந்து மீள்விக்கப்பட்டது