பக்கம்:அவள்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 451

இன்று நேற்று நாளை 451 டுண்டு நானே தின்கறப்போ தவிட்டைத் தின்கறாப் போல் தொண்டையை அடைக்கிறது. எனக்கு எதுவுமே உங்கள் கையட்டால் தனி ருசி. எனக்கு இப்பவே அமிர்தத்தின் ருசியைவிட அன்பின் மணம்தான் தேவையாயிருக்கு-’’

அப்படியே நான் அவளைக் கட்டிண்டுட்டேன். எனக்கு அழுகை வந்துடுத்து. இதுகூடத் தெரியாமல் நான் எப்படி இவ்வளவு மெளட்டீகமாயிருந்துடடேன்?

சின்னச்சின்ன விஷயங்கள்தான். நினைவில் சேகரிக்கவும் செளகரியமான விஷயங்கள். ஆனால் உன்னிப் பார்க்கப் பார்க்க, அலுக்காமல் விரியும் சக்தி அதுகளுக்குத்தான்.

நேற்று சாயந்திரம் விளக்கேற்றினதும் வழக்கம் போல் என்னை நமஸ்கரித்தாள்.

"நன்னாயிரு மகராஜியா! நமஸ்காரம் பண்ணவரவாளை தடுக்கப்படாது. ஆனால் இந்த சிரமத்தை இனிமேல் நீ தினமும் படனுமா?”

நெருப்பிலே விழுந்துட்ட மாதிரி அவள் புருவம் நிலை கொள்ளாமல் தத்தளிச்சது பார்க்க சங்கடமாயிருக்கு. இந்த மாதிரி சமயங்களில் அவளை நேர்முகம் பார்க்கக் கொஞ்சம் அச்சமாத்தானிருக்கு. அம்பாள் முகத்தை அர்த்தஜாம கற்பூர ஹாரத்தியில் பார்க்கறாப்போல்.

"என்ன அத்தை விளையாட்டுக்குச் சொல்றேளா, நிஜமாவேவா?’’

எனக்கு ஏண்டாப்பா சொன்னோம்னு ஆயிடுத்து.

'இத்தனை நாள் சொன்னேனா?' என்றேன்

இந்த மழுப்பல் சமாதானம் ஆகுமா, அதுவும் அவளுக்கு:

'அப்போ, ஏன் இப்போ சொன்னேள்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/495&oldid=1497678" இலிருந்து மீள்விக்கப்பட்டது