ஜவாலாமுகி 43
எதிர்பாராத சமயத்தில், பின்னால் வந்து தோளை அவள் தொடும் வேளையை அடையாளம் கண்டு கொள்ளத்தான் இந்தப் பிறவியே கொடுக்கப்பட்டிருக் கிறது.
அவள் தருண்டை.
வேளை நெருங்க நெருங்க ஒன்று தெரிந்துவிட்டது. ஆயிரம் பிறவியின் ஊடும், ஆயிரம் தவமிருந்து அவளை நான் நேருக்கு நேர் காணப்போவதில்லை. ஏனெனில் அவள் மயம் அத்தன்மைத்து. அவளே அவளுக்குத் தனியாயில்லை. அப்படியும் தன் பிம்பத்தைப் பாாத்துக் கொள்ளத்தான், புவனத்தைப் படைத்தாள். அவள் தன்னை வரைப்படுத்திக்கொள்ள முடிந்ததே இப்படித் தான். புவனம் அவள் கண்ணாடி-அவள் தன் அழகு அலுக்காதவள். அதனால்தான் அவள் கண்ணாடியைப் பிடித்தபடி, நாமும் பிம்பத்தோடு பிம்பமாய், அவள் பிம்பத்தைப் பார்த்தபடி.
ஒரு பரத நாட்டியம் பார்த்தேன். ஆட ஆட, நெற்றி வேர்வை முத்திட்டுத் துலங்கித் துலங்கி, அவள் அழகாகிக் கொண்டே வந்தாள்.
பறித்துப் பாவாடை உடுத்திக் கொள்ளலாம்.
காற்றில் அசையும் வாழை இலையின் வீச்சில், இன்னமும்
அருள் விரியாத குருத்தில்,
பொய்க் கன்றை மடியில் முட்டி, தாயின் கண்கள் வடிக்கும் கண்ணிரில்... ஐந்தருவி கொட்டும் வேகத்தில்... மின்னல் விழுந்தாற்போல பூமி வெடிப்பில்... மலை உச்சியில் நகரும் மூட்டத்தில் உருளும் இடியில்...
பக்கம்:அவள்.pdf/87
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
