பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


"அது கெடக்கட்டும். இப்போ நான் என்ன செய்யனும்?’’

"நீங்கள் ஏற்பாடு செஞ்சிருக்கிற 'மணமகன் தேவை?' என்கிற அதிநவீன சுயம்வரத்துக்கான போட்டியிலே பங்கு கொள்ள வந்து, உங்களோட பேட்டிக்காகக் காத்திருக்கிற ஒரு வேட்பாளன், நான். எனக்கு நேரம் ஆகுது. சீக்கிரமாக பேட்டியை முடித்து, என்னை அனுப்பி வையுங்கள், டாக்டர் ரேவதி.”

கட்டுப்படுத்திக் கொண்ட ஒழுங்கோடும், நிதானத்தோடும் அமைதியாகப் பேசினார், ஞானசீலன்.

தீயிலே வீழ்த்தப்பட்ட ரோஜாப்பூவாக வாடித் துடித்தாள், ரேவதி. உந்திக் கமலத்தின் பொங்கிப் புரண்ட சுடுநீர் வெள்ளம் கண்களிலே வடிகால் கட்டிப் பாய்ந் தோடிற்று. மேனி நடுங்கியது. நெஞ்சை ஆற்றாமை யோடு பிசைந்து கொண்டாள். "நீங்கள் ஏன் இப்படி என்னை சோதிக்கிறீங்க?" என்று கேட்டு விம்மினாள்.

அப்போது சிரித்தது ஞானசீலன்தானா? "நான் உங்களை சோதிக்கிறேனா? அடக்கடவுளே! உங்களுக்கே உங்கள் விஷயம் மறந்து போச்சா, என்ன? மிஸ் ரேவதி, இப்ப என்னைச் சோதிக்க வேண்டியது நீங்கள்தான்! ஊம், தொடங்குங்கம்மா!" என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.

"உங்களைச் சோதிக்க நான் யார்?’’

"நீங்கள் மிஸ் ரேவதி-மிஸ் டாக்டர் ரேவதி!’

ஞானசீலன் மீண்டும் சிரித்தார், ஏளனமாகவே சிரித்தார்.

ரேவதி ஆண்மையின் கம்பீரமான செருக்கோடு, குணிந்திருந்த தலையை நிமிர்த்தி உயர்த்துகிறாள். நேர் கொண்ட பார்வையால் ஞானசீலனைப் பார்வையிட்டாள். அளந்தாள். சோதித்தாள்...'இவரை...மிஸ்டர்