பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

மிகச் சிறப்பாக வெளியிட்டவர்கள். ‘புனைபெயரும் முதல் கதையும்’ என்னும் நூல் இவர்களது திறனாய்வுத் திறனுக்கு ஒரு சான்றாக அமைகிறது.

எளிய வாழ்க்கையும், உயர்ந்த நோக்கமும் கொண்ட இவர்கள் எழுத்தையே நம்பி வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடியாத நிலைமையில் தவிக்கிறார்கள். எல்லா இலக்கிய வடிவங்களில் எழுதியும் எவ்வளவோ எழுதியும் வசதியான வாழ்வும் சமூக அந்தஸ்தும் பெற தமிழகத்தில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. பிரபலமான பத்திரிகைகளில் இடைவிடாது தொடர்ந்து எழுதினால்தான் ஒரளவு பிழைப்பு நடத்த முடிகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் எழுத்துத் தவம் செய்யும் பூவை ஆறுமுகனாருக்கு இது மணிவிழா ஆண்டு. அவருடைய மணிவிழாச் சிறப்பு வெளியீடாக மணிவாசகர் பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது. பூவை ஆறுமுகம் என்னும் பெயர் பலரறிந்த பெயர்: நல்ல பெயர்; நாடறிய வேண்டிய பெயர். நல்லவருக்கு மணிவிழா ஆண்டில் எல்லா நலன்களும் நிரம்ப தமிழன்னை அருள் புரிவாளாக.