பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

எரிச்சல் மூண்டிருக்கலாம். அவள் ஆகாயத்திலே மிதந்தாளோ?... போட்டியாம்... சே! நடந்தாள். இரகசியமான பீரோவை வெட்ட வெளிச்சத்தில் திறந்தாள்.

அதோ அந்தத் திருமணப் படம்! ஞானசீலனும் ரேவதியும் மாலையும் கழுத்துமாக புன்னகையும் புது நிலவுமாக எத்துணை கம்பீரமான தூய்மையுடன் தரிசனம் தருகிறார்கள்.

அது... அது... திருமாங்கல்யம்!

ரேவதி சிலையானாள். சிலையென்றால், சாமானியச் சிலையா? - மோகினிச் சிலை அல்லவா! தீயிலே கால்கள் இடறி விழுந்துவிட்ட பாவனையில், உயிர்துடித்தாள் உடல் துவண்டாள். மனச்சாட்சி தீ மூட்டிய புண்ணி, நெருப்பிலே அவள் உயிர் திரிகரண சுத்தியோடு அக்கினி பிரவேசம் செய்ததோ என்னவோ?

படிக்கட்டில் காலடி ஓசை .

செல்வி குழலி நம்பகமான, நல்ல தகவல்களோடு சீக்கிரத்தில் திரும்பிவிட மாட்டாளா?

ரேவதி ஏங்கினாள்; தவித்தாள். உருகினாள்.

‘மணமகன் தேர்வுக்காக அஞ்சு மணிக்கு நடக்க விருக்கிற இன்டர்வ்யூ இப்ப எனக்கு அவசியம் இல்லையே! தேவையும் கிடையாது!... அதை நான் கான்ஸல் செஞ்சிடப் போறேன்!... இப்ப முதலும் முடிவுமாக எனக்குத் தேவைப்படுவது ஒண்ணே ஒண்ணுதான்! - இன்றைக்கு மிஸ்டர் ஞானசீலனின் உண்மையான நிலை என்ன, நிலவரம் என்ன? இந்த விவரம் எனக்குத் தெரிஞ்சால் போதும்; மற்றதை நான் பார்த்துக்குவேன்! - நான் டாக்டர் ரேவதியாக்கும்! - மனத்தில் ஏற்பட்ட அழுத்தம், ஏற்படுத்திய ஆற்றாமையில் அவள் தளர்ந்திருக்கலாம்.

யார்?