உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

47

காரந்துடன் படுக்கையறையில் அவனை ஒருமையில் ஏசிப் பேசுவாள்.

அவனுக்குப் புரிந்தது; எவ்வளவு பெரிய தப்பு பண்ணி விட்டோம் என்று. அந்தரங்கமாக் பாலுவிடம் போய்ச் சொல்லி இதற்கு வைத்தியம் கியித்தியம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தான்். போய்ச் சொல்லவும் செய்தான்.

பூரணி எங்கோ போயிக்கும்போது அவன் பாலுவைத் தேடிப்போனான். வெகு நிதானமாக பாலு மாடியில் நாற்காலியில் சாய்ந்தபடி அறைகுறை நிர்வாணப் படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

பட்டப்பாவுக்கு வெட்கமாக இருந்தது.

“சீச்சீ என்ன ஸார் இது? கண்டதுகளைப் போய்ப்பார்க்கிறிங்க”

அவன், “ஒஹ்ஹோ” என்று சிரித்துவிட்டு, “கண்டதா? இது கான் வாழ்க்கை. உங்கப்பா, உங்க தாத்தா, முப்பாட்டன் எல்லாரும் ரசித்த விஷயம். அவாள்ளாம் கோயிலுக்கு சுவாமி பாக்கவா போனா. இந்த மாதிரி சிற்பங்களைப் பார்க்கப்பபோனா இப்ப ரொம்ப செளகர்யமா போட்டோவா வந்திருக்கு வா உட்கார்ந்து நீயும் பாறேன்”

“இதையெல்லாம் பார்க்கறதிலே என்ன புண்ணியம் சார்?”

“புண்ணியமாவது பாவமாவது? இன்னும் ரசனையோடு வாழ்க்கையச் சுவைக்கலாம்”

“எனக்கு ஒண்ணும் தோணலை சார் என் பிறவியே வேறே. இதிலெல்லாம் எனக்கு நாட்டமே இல்லை”

“புரியறது”

“என்ன சார்?”

“உன்னைப்பத்தி புரியறது .. பாவம்! அந்த அழகானப் பொண்ணை இப்படி ஏமாத்தி இருக்க வாண்டாம் முட்டாள்.”

“மருந்து கிருந்து இருக்கா சார்? சாப்பிட்டு பார்க்கிறேன்”

“அதான்போடறானே. முத்து பஸ்பம், தங்கபஸ்பம்னு டிரை பண்ணு”

“பொறவியே இப்படி...”