பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

5


2

அவளுக்குத் திருநீர்மலையில் கல்யாணம் நடந்தது. முதன் முதலில் பட்டப்பா அவள் கையைப் பிடித்தபோது அது ஒரு பெண்ணின் கையைப்போல மெத் மெத்தென்று மிருதுவாக இருந்தது. ஆண்மகனின் அமுத்தமான பிடியாக இராமல் தோழிப்பெண் ஒருத்தி மிக நளினமானக் கையைப் பிடித்து வருடுவதுபோல இருப்பதை உணர்ந்தாள். பட்டப்பா அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. விளையாட்டுப் பையன் போல எதை எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதாவுக்கு பிள்ளைவீட்டார் போட்டிருந்த நகைகளைப் பார்த்து பூரித்துப்போனாள் அவள் அம்மா.

சிவப்புக்கல் நெக்லஸ், இரட்டைவடம் சங்கிலி, காதில் நவரத்தினத்தோடுகள், கையில் நாலைந்து தங்க வளையல்கள், ஒரே சமயத்தில் ஐந்தாறு பட்டுப்புடவைகள். என்னவோ திடீரென்று அஷ்டலெஷ்மிகளின் சாந்நித்தியம் தன் வீட்டில் ஏற்பட்டு விட்டமாதிரி அந்த அம்மாள் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.

கல்யாணத்தன்று பகலே திருநீர்மலையிலிருந்து எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். திடீரென்று ஒர் அதிஷ்ட தேவதை தன் மீது கருணை மழை பொழிந்து தன்னைப் பணக்காரியாக்கி விட்டதை நினைத்து மலைத்துப் போயிருந்தாள் நர்மதா. எல்லாப்பெண்களையும் போல அவள் புக்ககம் புறப்படும்முன் கண்கலங்கினாள்.

அவள் அம்மாவும், மன்னியும், அண்ணாவும் அழுதார்கள். நர்மதாவால் தனக்கு விடிவுகாலம் வந்து விட்டது என்று அவள் அம்மா பெரிதும் நம்பினாள்.

வளைந்து வளைந்து போகும் அந்தச்சாலையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் கணவனுடன் அவள்