பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்33



இருக்கும் இராமாயணத்தில் கம்பனுடைய செல்வாக்கும் தாக்கமும் எப்படி ஏற்பட்டிருக்கின்றன என்பதை-டோக்கியோவிலிருந்து வந்த அந்தப் பேராசிரியர் பேசக் கேட்டேன்.

ஆதிகாவியம் எழுதிய வால்மீகிக்கு ஏறத்தாழ ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னாலே கம்பன் வந்தான். வால்மீகி யினுடைய இராமகாதை ப்ரைமரி எபிக் (primary epic) ஆதிகாவியம் என்று சொல்லப்படும்; ஆதி காப்பியத்திலே உணர்ச்சிகளை அப்படி அப்படியே சொல்லியிருப்பார்கள். அங்கே நகாசு வேலையே கிடையாது. அதுதான் பிரைமரி எபிக்கோட லட்சணம். அந்தப் ப்ரைமரி எபிக்ஸ் - மனிதர்கள் வளரவளர அதை அப்படியே சொல்வது என்பது பொருத்தப்படாது. ஆகவே, அதைக் கொஞ்சம் அழகுபடுத்தி- அந்த உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும். அதே நேரத்திலே அதை மென்மையாக-அழகு பொருந்த- tastefully என்று சொல்லுகிறோமே அந்த முறையில் சுவை ததும்பக் காட்டவேண்டும் என்பதுதான் லிட்டரரி எபிக் என்று சொல்லப்படுகின்ற இலக்கியக் காப்பியத்தினுடைய அடிப்படையாகும். அந்த முறையிலே கம்பநாடனுடைய காப்பியம் ஆதிகாவியமாகிய வால்மீகத்திலிருந்து பெரும்பகுதி ஒட்டிச் செல்கிறது, மறுக்க முடியாது.

அனுமனைப் பற்றிக் கம்பன் அத்தனை பாடுகிறானே, அவை அத்தனையும் வால்மீகத்தில் இருப்பதுதான். நினைத்துப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பழங்காலத்திலே காட்டிலே வாழ்ந்த ஒரு மாபெரும் கவிஞன், இப்படி ஒரு காப்பியத்தை அமைத்தான் என்றால், அது இறைவனுடைய அருள்

அ.ச.ஞா.ப-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/41&oldid=480984" இலிருந்து மீள்விக்கப்பட்டது