பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்37



பொது அது. இப்படி உலகம் முழுவதையும்- உலகம் யாவையும் என்று தொடங்கினானே - அதை மனத்தில் வைத்துக் கொண்டே உலகம் முழுவதற்கும் நீதி புகட்டுகின்ற முறையிலே கவிஞன் தன் காப்பியத்தை அமைக்கிறான். கதையாகப் பார்த்தால் கதையை அனுபவிக்கலாம். கதையை விட்டுவிட்டு, சிறு பாத்திரங்களாக - சிறுசிறு பாத்திரங்கள் நடந்து கொள்ளுகின்ற முறையிலே பார்ப்பீர்களானால்-எப்படி நடந்துகொள்ள வேண்டு மென்பதை அவன் தனக்கே உரியமுறையில் எடுத்துச் சொல்வான்.

இன்னும் சொல்லப் போனால் clairvoyant என்று சொல்வார்கள். வருங்காலத்தையும் அறிந்தவன் கவிஞன். என்று. இந்த 1995 அல்ல- 2996லே கூட- நீங்கள் எவ்வளவு தான் மக்களாட்சி என்று சொல்லப்படுகிற ஒட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் ஆட்சி வந்தாலும்கூடக் கம்பன் சொல்லிய சட்டம் என்றைக்கும் செல்லும்.

அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதுஆம்

இன்றைக்கும் அனுபவித்துக்கொண்டேயிருக்கிறோம். ஆகவே, கம்பன் என்றைக்கும் பொய்யாவதே இல்லை.

அறன் இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்பதை ஒட்டுப் போடுகிற காலத்திலேகூட உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, உலகம் முழுவதற்கும்- என்றைக்கும் பொதுவாக- வள்ளுவப் பேராசான் எப்படி ஒரு பொதுநூல் இயற்றினாரோ அது போல இந்தக் காப்பியத்திலே உங்களுக்குப் பிடித்தால் இராமனையும், இலட்சுமணனையும் வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டு