பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திறனாய்வு : கருத்துப் பரிமாற்றம்

25. அய்யா, இலக்கியத் திறனாய்வு என்ற ஒரு வகைமைக்கு நீங்கள் எவ்வாறு வந்து சேர்ந்தீர்கள்? தமிழ் இலக்கியம் படித்துத் தமிழ் இலக்கியத்தைக் குறித்து உங்களுடைய கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்களா, இல்லை, தமிழ் இலக்கியத்தைப் படித்து விட்டு ஆங்கிலத் திறனாய்வு முறை படித்தபோது இவை இரண்டையும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ண மேலிட்டால் இந்த இலக்கியத் திறனாய்வுக்கு வந்தீர்களா?

இந்த இரண்டுமே இல்லை. படித்தது விஞ்ஞானம், அப்புறம் கடைசி ஒன்றரை வருடம் தமிழ்ப் பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியர் பணிக்கு வந்தபோது ஒரு சிக்கல் ஏற்பட்டது. 1940-லே பி.ஓ.எல் (ஹானர்ஸ்) வைத்த போது லிட்டரெரி கிரிட்டிசிஸம் என்ற ஒரு 'சப்ஜெக்ட்' புகுத்தியிருந்தார்கள். அந்த மாதிரி ஒரு சொல்லை அதுவரையிலே தமிழ் உலகத்திலே கேள்விப்பட்டது இல்லை. ‘லிட்டரெரி கிரிட்டிசிஸம் என்ற சப்ஜெக்ட் வந்த உடனேயே அதை யார் எடுக்கிறது என்று பார்த்தவுடனே துறைத் தலைவர் கந்தசாமி முதலியார் 'நீங்க எடுத்து நடத்துங்க' என்று சொல்லிவிட்டார். அதற்கு முன்னால் 'விமர்சனம்' என்ற சொல் பரவலாக இருந்ததே தவிர, தமிழ் இலக்கியத் திறனாய்வு என்று அப்போது இல்லை. அதைப் பற்றி ஒரு 'பேப்பரே' 'கம்ப்ளிட்டா' IV Hons, V Hons இரண்டிலுமே இருக்குங்கிற காரணத்தினாலேயே அது என்னிடத்திலே கொடுக்கப்பட்டது. அது