பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



யான் சுவை என்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத் தெய்வம் தந்தின்று’ இங்கு... It is only a temporary state நாங்க மறுபடியும் ஒன்றாகத்தான் இருக்கப் போகிறோம். ஒருவரையொருவர் அனுவிக்க வேண்டும் என்பதற்காகத் தெய்வம் எங்களைப் பிரித்தது. இதுதான் அகத் துறையினுடைய basic concept.

61. இரண்டும் இருக்கிறதால்தான் சுவைக்கிறங்க... அப்படித் தானே?

ஆமாம். அதற்காகப் புருஷோத்தமன் தன்னுள்ளே இருக்கிறவன். பிரபந்தத்துலகூடச் சொல்லுவாங்க, எண் பொருளாகவும், பஞ்சபூதங்களாகவும், நானாகவும் உடலாகவும், உயிராகவும், எல்லாமாகவும் இருக்கிறான். அவன் எப்படி அனுபவிக்கிறான்!

62. பெரியாழ்வார் சொல்கிறாரே, பெருமாளைப் பார்த்துப் பாடும்பொழுது, அரங்கனைப் பார்த்துப் பாடும்பொழுது... பெரியாழ்வாரும், ஒரு ஆண், திருமாலும் ஒரு ஆண். ஆனால், அவங்க இரண்டு பேருக்கும் இடையிலே அவரு பாட்டுப் படிப்பது புரியலையே?

நாம். ஆண்-பெண் என்றால் ஃபிசிகல் பாடியை வைத்தே அர்த்தம் பண்ணிட்டு வந்துட்டோம். Physical body never came into play. அங்க ஆண்னு பிரிக்கின்ற பிரச்சினையே கிடையாது. இதில் எல்லா உயிர்களும் பெண்கள். இறைவன் ஒருத்தன்தான் ஆண்.

63. பிறகு ஏன் இப்படி ஆண் விகுதியிலே எழுதி யிருக்காங்க?

சொல்வதற்கு ஒரு வழி. தத்துவ ரீதியாக எல்லா உயிர்களும் ஒன்று. பிராக்டிகலா...

64. So, அவன்-கிறது அங்கே அவள்தான்.