பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



களைப் பத்தி ஒரு extension lecture Laossmorgostbgy கேட்டாங்க. புடிச்சேன். அதுலதான் பாரதி-பாரதிதாசன் வந்தது. மன்னர் மன்னன் ரொம்ப நாளைக்கு முன்னால ஏதோ ஒரு கூட்டத்துல சொன்னானாம், எத்தனையோ பாரதிதாசன் புஸ்தகங்கள் ஏதும் ஈடா வரலேன்னு. எனக்குச் சுத்தமா பிடிக்காத கொள்கைக்காரர்கள் இரண்டு பேர். பெரியாரு. பெரியாரைப்போல ஒரு பண்புடைய மனிதனைப் பார்க்கவில்லை, நான் இன்னமும். திரு.வி.க. கூடவே இருந்தவன். ரொம்ப காலமாப் பெரியார் வந்தா, நான் உள்ளே எழுந்து போயிருவேன். திரு.வி.க. மட்டும் சொல்லுவார் மடையா, நீ ஐயா பத்தித் தெரிஞ்சுக்கல. பின்னால தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுச்சு. அதுக்கப்புறம், அந்த மனுஷன்கிட்ட எல்லையில்லாத மதிப்பு எனக்கு. அதே மாதிரி இவன் பாரதிதாசன். பண்புடைமை அதிகாரத் திலே பண்புடையார்ப் பட்டுண்டு என்று வள்ளுவன் பாடினானே அப்படியொரு...

113. மறைமலையடிகளாரைப் பத்திச் சொன்னீங்க. ஏன் அவரு வந்து... வைணவ நீக்குப் போக்கு இல்லாமல் பெரியாழ்வார் பாசுரம் பாடுனா... ஏன் அந்தச் சைவருக்கு, நீங்க அத துய்த்து உணர்ந்த மாதிரி இல்லாமல் அவர்களுக்கு முடியலையே, ஏன்?

அது வந்து ரொம்ப குறுகிய மனப்பான்மை. சொல்வதற்கு மறந்து போயிட்டேன். பாரதிதாசன் இறந்தபோது, டைரக்டரா இருந்தேன்- அப்ப மினிஸ்டர் வன்னியரு, ரொம்ப யெங்க அழகா இருப்பாரு, அவரு தலைமையிலே ஒர் இரங்கல் கூட்டம். நா. பார்த்தசாரதி முதல் பேச்சு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/98&oldid=481844" இலிருந்து மீள்விக்கப்பட்டது