பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

ஆண் : சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு-சின்னச்
சிட்டு! உன் பார்வை மின் வெட்டு!
பெண் : சிங்காரக் கைகளில் என்னைக் கட்டு! நெஞ்சைத்
தொட்டு! உன் அன்பை நீ கொட்டு! (சித்)


ஆண் : இது காதல் நாடக மேடை!
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை!
ஆண் : இங்கு ஆடலுண்டு!
பெண் : இன்பப் பாடலுண்டு
ஆண் : சின்ன ஊடலுண்டு!
பெண் : பின்னர் கூடலுண்டு! (சித்)


ஆண் : மது உண்டால் போதையைக் கொடுக்கும்!
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்!
ஆண் : தன்னைத் தான் மறக்கும்!
பெண் : அது போர் தொடுக்கும்!
ஆண் : இன்ப நோய் கொடுக்கும்!
பெண் : பின்பு ஒய்வெடுக்கும்!
ஆண் : இங்கு தரவா நானொரு பரிசு?
பெண் : அதைப் பெறவே தூண்டுது மனசு!