பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
189
பாலுந் தேனும் பெருகி ஓடுது
பரந்த சீமையிலே நாம்
பொறந்த சீமையிலே! ஆனா
பாடு படுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே-வருஷத்தில்
பாதி நாளையிலே!
ஒ....என்னடா தம்பி நேராப்போடா
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா
தம்பிப் பயலே-இது
மாறுவதெப்போ? தீருவதெப்போ?
நம்ம கவலே!
வானம் பொழியுது! பூமி விளையுது!
தம்பிப் பயலே-நாம்
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது
தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே(மனுஷனை)
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே(மனுஷனை)