பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240
ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம்
அஞ்சாமல் தினம் செய்து
ஊருக்கு நீதியை உபதேசம் செய்யும் -
உலுத்தப் பயலும் ஒரு சாமி!
ஆருக்கும் குடியல்லோம் அஞ்சோம் நமனை என்று
ஆர்ப்பாட்டம் செய்து
நேருக்குநேர் வெறும் நிழலைக் கண்டு நடுங்கும்
நீசப் பயலும் ஒரு சாமி!


கஞ்சாக் குடிப்பவனும் சாமி!-கடவுளைக்
கண்டதாய்க் கதைப்பவனும் சாமி!
காமியெல்லாங் கூட இங்கே சாமி!-பணம்சேர்க்கக்
கயிறு திரிப்பவனும் சாமி!
எத்தனெல்லாம் சித்தன்!
ஏமாறுபவன் பக்தன்!
ரோஹியெல்லாம் யோகி!
பைராகி பெரும் தியாகி!
ராஜராஜன்-1957
இசை : K. V. மகாதேவன் -
பாடியவர் : T. M. செளந்தரராஜன்