இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
239
- சாமி சாமி என்று ஊரை ஏய்க்கின்ற-ஆ
- சாமி ரொம்ப இந்த நாட்டிலே!-ஒரு
- சாண் வயித்துக்காக ஆண்டவன் பேரையும்
- சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே-ஏ சாமியோ!-நடு
- சந்திக்கிழுக்கிறாங்க பாட்டிலே!
- (சாமி)
- தாடிசடைமுடி தண்டு கமண்டலம்
- கொண்டவனெல்லோரும் சாமி!-நல்லாப்
- பாடுபட விரும்பாத திருவோட்டுப்
- பரதேசிப் பயல்களும் சாமி!
- கூடுபொய் வீடுபொய் குடும்பம் பொய் எனப்பாடும்
- கேடுகெட்டவன் ஒரு சாமி!
- தன்குட்டு மறைய வேடம் கட்டிக் கடவுள் பெயர்
- குரைக்கும் நாயும் ஒரு சாமி!-இப்படி
- (சாமி)
- கட்டின பெண்டாட்டிதனை விட்டுவிட்டு ஓடிவந்த
- கையாலாகாதவனும் சாமி!
- கடனைவாங்கித் திருப்பித்தரமுடியாத காரணத்தால்
- காஷாயம் உடுத்தவனும் சாமி!
- சுட்ட திருநீறு பூசித் துந்தனாவை மீட்டி வரும்
- துடுக்கனும் கூட ஒரு சாமி!
- விட்டெறிந்த எச்சிலையை வீதியில் பொறுக்கித்தின்னும்
- கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி
- (சாமி)
- கிறுக்கனும் கூட ஒரு சாமி! இப்படி