பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

287



கொஞ்சும் மொழி பெண்களுக்கு
அஞ்சா நெஞ்சம் வேணுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே
வாளும் ஏந்த வேணுமடி....
(கொஞ்)


மங்கம்மா பரம்பரையில் பிறந்தவரன்றோ?-நாம்
மானங் காக்க போர் புரிந்தால் அதிசயமுண்டோ?.....
மங்காத ஒளி விளக்காய் மாசுஇல்லா மாணிக்கமாங்
மண்மீது புகழுடனே வாழ்ந்திடவே இந்நாளில்
(கொஞ்)


வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கக்கூடாது.
அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது!
அம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து
விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே
(கொஞ்)


அல்லி அரசாணிமாலை படித்ததில்லையோ?.. அவள்
அர்ச்சுனனை அடக்கியதாய்க் கேட்டதில்லையோ?....
அடிமை கொள்ளும் ஆடவரின் கொடுமைகளை திருத்திடுவோம்;
அறிவின் திறமையினால் உலகையெல்லாம் ஆண்டிடுவோம்!
(கொஞ்)



நீலமலைத் திருடன்-1957


இசை: K. V. மகாதேவன்