பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
300

300 ஒருவன் : லாபமா? நஷ்டமா?-நைனா லாபமா? நஷ்டமா? ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா) சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம் ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன் ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா வேரைக் கெல்லி மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளி காயவச்சு வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு நைனா-லாபமா?-நஷ்டமா? இதனால்-லாபமா?-நஷ்டமா! மற்றொருவன் : பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும். பல மரமும் போனா நிழலும் ஏது பணமும் ஏது லாபமேது நைனா! ஒருவன் : சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே ஜாஸ்தியர்கிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக, சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால் இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் - போல் புத்திசாலி யாரு இந்த ஊரிலே?