பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 நித்திய பாலன் வார்த்தையைச் சந்திரா என்கிற பரிபாஷை அர்த்தத்தில் எழுதியிருப்பதாக, மாமி அனர்த்தப்படுத்தியிருக்கலாம்: ஆகையால் நானும் கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டேன். என்றாலும், இந்தப் பத்தாண்டு காலத்திலும், என் ரமேசை நான், எந்த நாளும் மறந்ததில்லை. என் மூத்த மகன், அப்பா. ஒங்களுக்கு. ரமேஷ்தான் ஒசத்தி. நான் ஒன்கு வேணாம்' என்று அம்மா அடிக்கடி சொல்வதை ஒப்பிக்கும் போது நான் பெருமிதப்படுவேன். ரயில் ஆக்ராவுக்கு வந்துவிட்டது. ரமேஷைப் பார்க்கப் போகிறோம், என்ற எதிர்பார்ப்பு ஒரு பைத்தியமாகி, என்னை அங்கேயே உள்ள கீழ்ப்பாக்கம் டைப் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய அளவுக்கு ஆவல் தாங்காமல் ஆடினேன். "ரமேஷ் இன்னைக்கு. ஸ்கூலுக்கு போகாதடா. மாமா. மாமா வாரேண்டா என் வாடாத பூவே. வற்றாத. அருவியே. இருடா. இருடா. இதோ.. இதோ வர்ரேண்டா..." டில்லிக்கு வந்ததும், அவசரமாக ரயிலிருந்து இறங்கி, ஒரு ஸ்கூட்டரை (தில்லியில் ஸ்கூட்டர் என்றால் ஆட்டோ ரிக்ஷா) பிடித்துக் கொண்டு, கனாட்பிளேஸில் ஓர் ஒட்டலி ல் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு, முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, வெயிட்டிங்கில் நின்ற அதே ஸ்கூட்டரில் ஏறி, ஆர்.கே.புரம் போனேன். பழைய குவார்ட்டர்சில் அவர்களுக்குப் பதிலாக ஒரு சர்தார்ஜி! துடித்துப் போன என்னிடம் சர்தார்ஜி, அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அதே ஆர்.கே.புரத்தில் தான் இருக்கிறார்கள். ஸ்கூட்டரை அறுபது கிலோ மீட்டருக்குக் கொண்டு போன டிரைவரை மேலும் விரட்டினான். மிஸ்டர். வேங்கடராமன், ஆபிஸ் போய் விட்டார். மாமி மட்டும் இருந்தாள். சொந்த மகனைப் போல், என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "எங்கள. மறக்கலிய.