பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


142 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். "ஒங்களத்தான். ஏதாவது பேசுங்களேன். ஒங்கிட்ட .ெ சா ல் ல வே ண் டி ய அ வ சி ய மி ல் ல ன் னா வது சொல்லுங்களேன். ஏன் அப்படி புதுசா பார்க்கது மாதிரி பார்க்கிங்க?" பொன்னம்பலம், அவளை புதுசாத்தான் பார்த்தார். அவளை முப்பதாண்டுகளுக்கு மேல் கண்டவருக்கு, இப்போது அவளுள் ஒன்றைக் கண்டுபிடித்த தோரணை. அவள், ஒரு கோளறு பதிகமாகவே தோன்றினாள். அவளை விளக்கமாய் பார்த்துப் பார்த்து, தன்னுள்ளும் விளங்க வைத்தார். அவள் முகம் நோக்கி, அந்த முகம் வழியாய் பிடறியை ஊடுருவி, அந்தப் பிடறிக்குப் பின்னால், கடந்த கால நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார். - செந்துர்க் கடல் தோன்றுகிறது. அப்போது அந்த கடல் அவருக்கு முருகனை ஆராதிக்கும் விஞ்சைக் கடலாய் தோன்றியது. இப்போது வெறுங்கடலாய் காட்சி தருகிறது. முருகன் சிலையைக் கும்பிட முன்வாங்கிய அலைகள், இப்போது அப்படிக் கும்பிட மனமில்லாமல், பின் வாங்குகின்றன. அன்றைய சூரசம்கார கடல்வெளி, மணல் பரப்பாகிறது. தேரிகள் திட்டுகளாகின்றன. முந்தாநாள் வரை, மனைவி மீது எரிச்சலூட்டிய அந்த கடலும் கடலோரமுமான பழைய நிகழ்ச்சிகள், ஞானசாகரத்தின் வெளிப்பாடுகளாகின்றன. அந்த வெளிப்பாடுகளில் அவர் மனம், கால் நிமிடம் பின் சென்று, உடனடியாய் நிகழ்ச்சிகளின் சாம்பலான நினைவுகளாகின்றன. இந்தப் பொன்னம்பலத்தையும், அப்போதையை புதுமனைவியான இந்தக் கோலவடிவையும், அவள் பாட்டி, முடிச்சு போட்டு ஒன்றாக்குகிறாள். இவரது இடுப்பு மடிவேட்டித் துணியும், அவளது மாராப்பு முனையும், முடிச்சு வட்டமாகின்றன. கடலுக்குள் போகத் தயங்கும் இவளை, பாட்டிதான் கணவன் பக்கமாய் ஒரு தள்ளலும்,