பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 7 சிறுமை வரும்போதெல்லாம் அப்பப்ப வெடிக்கணும். மனசில இருக்கிற வெடிகளை வாய் வழியா விடணும். இல்லேன்னா ஒரேயடியா வெடிச்சுப் போயிடுவோம்." நான் அசட்டையாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் போய்விட்டான். அவன் வாய் முனங்கியது. ஒருவேளை, அவள் எனக்கு கேட்கும்படி பேசியதை, இவன் மீண்டும் உறுதிப்படுத்துகிறானோ என்னவோ? மனம் சங்கடப்பட்டது. அனைவரையும் சமமாக பாவிக்கும் என்னைப் பற்றிய அவனது மதிப்பீடு என்னை எனக்குள்ளே தாழ்த்திக் கொண்டே இருந்தது. இப்படித்தான் அம்மா இறந்த சமயத்தில் வாத்தியார் ஏ.சி.சி.ல சேர விரும்புகிறவங்கல்லாம், எழுந்திருங்க என்றார். நான் மற்ற மாணவர்களோடு எழுந்தேன். உடனே பக்கத்தில இருந்த டிரில் மாஸ்டர் 'உன் உடம்பு தாளாது. உட்காருடா' என்றார். நான் கூனிக் குறுகி உட்கார்ந்தேன். இப்போது ஏனோ எனக்கு அந்த நினைப்பு வந்தது. நான் சிறுமை கண்டு தவித்தபோது, கடைநிலை ஊழியனான கண்ணன் உள்ளே வந்தான். நான் முகத்தை கேள்வியாக்கிய போது, 'ஸ்ார். வீட்டிலே சொகமில்லே. பிள்ளைத்தாய்ச்சி. சிசேரியன்ல முடியுமோ என்னமோ. டெலிபோன் வந்தது. கொஞ்சம் பெர்மிஷன் என்று இழுத்தான். உடனே நான் பதைபதைத்து இருக்கையிலி ருந்து எழுந்த படியே உடனே டாக்டரன்டே கட்டிட்டுப்போ. பணம் தேவையா என்று கேட்டுவிட்டு, மீண்டும் அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்தேன். அவனோ எனக்கு ஒண்ணும் வேணாம் ஸார். என் வீட்டுக்காரிக்கு சுகப்பிரசவம் ஆகணும்னு கடவுள வேண்டிக்குங்க. நீங்க என்ன வேண்டினாலும் அது நடக்கும். போன தடவை என் தம்பிக்கு வந்த இன்டர்வியூ பற்றி உங்ககிட்ட சொன்னேன். நீங்க ஆசீர்வாதம் செய்தீங்க. அதனாலேயே எந்த சிபார்சும் இல்லாமலே அந்த வேலை அவனுக்கு கிடைச்சுது பாருங்க. நீங்க அனுமான் மாதிரி. உங்க சக்தி உங்களுக்குத் தெரியாது.