பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 தோன்றாத் துணை எழுத வேண்டிய கிளார்க் லீவுல போயிருப்பான். நான் எதுக்கும் எங்க மாமாவுக்கு (எம்.டி.) நாளைக்கு எழுதுறேன்." 'நான் இந்த மாதம் நானூறு ரூபாய் வாங்கிட்டு வருவேன் என்கிற தைரியத்துல எங்க அப்பா வண்டி இழுக்கிறத நிறுத்திட்டாரு. இரு நூறு ரூபாய் கடன் இருக்கு கடன் கொடுத்தவன் மோசமான மனிதன், போன மாசம் பக்கத்து வீட்டுக்காரங்களை மானம் போறமாதிரி பேசிட்டான். பிரகாஷ், வேலை போயிடாதே?" வசந்தியால் கண் ணிரை அடக்க முடியவில்லை. பிரகாஷ், அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். "அசடே, இதுக்கா அழுவுறே? உனக்கு ரெண்டு மாதச் சம்பளம் சேர்ந்து வரப் போகுது. இந்தா, இருநூறு ரூபாய். ஏன் யோசிக்கிறே? ஒசியா கொடுக்கல, வட்டி போட்டு வாங்குவேன். நான் ஈட்டிக்காரனைவிட மோசமானவன்." அவள், லேசாகச் சிரித்தாள். அவன் அவள் கண்களைப் பட்டும் படாமலும் துடைத்துவிட்டான். பிறகு, கைக்குட்டையால் அவள் கன்னங்களைத் துடைத்தான். வசந்தி எச்சரிக்கை அடைந்தவள் போல், 'ஸார். உங்க மனைவியும், பிள்ளைகளும் காத்திட்டிருப்பாங்க" என்று எழுந்தாள். பிரகாஷிற்கு மனச்சாட்சி நெஞ்சில் குத்துவதுபோல் தோன்றியது. குத்தலாகப் பேசுகிறாளே! அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ! என்றாலும் அவள், அவனை ஒன்றும் சொல்லாதது உற்சாகத்தைக் கொடுத்தது. இப்போது, அலுவலகத்திற்குள்ளேயே, அவன், அவள் கையைத் தட்டுவதும், சடையைப் பிடித்து இழுப்பதும் சகஜமாகிவிட்டது. அவள் எதிர்ப்பை அதிகமாகக் காட்டவில்லை. அலுவலகத்தில் பலரால் ஒதுக்கப்பட்ட அவளுக்கு, அவன் தைரியம் கொடுத்தான். தாழ்வு மனப்பான்மையில் தவித்த அவளுக்கு, தன்னம்பிக்கை