பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 47 மூணு பொம்மனாட்டிங்க... அஞ்சாவது பிள்ளை... பொண்ணுல, ரெண்ட, மகமாயி வாரிக்கிட்டா... மூணாவதா. ஒரு கஸ்மாலம். டெல்லிக்கோ... சிங்கப்பூருக்கோ சொல்லாம கொள்ளாம பூட்டான். கட்சி பொண்ணும். கட்சி பிள் ளயும் தங்குனப் போ... ஆம்புடையான் தங்கல. நாப்பது வயசில. துள்ளத் துள்ளத் துடிக்கச் செத்துட்டுது. நானு கூலிவேல பாத்து, பிள்ளைங்கள காப்பாத்துனேன். இப்போ மவனுக்கு பல்லாவரத்துல வாட்ச்மேன் வேல. இத்த வேலய நான் தான் வேலபாக்குற ஒரு வீட்டு ஐயா கிட்ட சொல்லி வாங்கிக் குடுத்தேன். பொண்ண காலுல கையிலே பூட்டி கல்லாணம் பண்ணுனேன். அப்புறம். இப்போதான் ராமாயணம் துவங்குது.” எல்லம்மா பெருமூச்சு விட்டதில் அவள் பஸ் ஸ்டாப் சினேகிதியின் புடவை ஆடியது; வார்த்தைகளைப் பிரசவித்துக் கொண்டே இருந்தது "ஆறு வீட்ல வேல பார்த்தேன்ே. காலங்காத்தால. பாத்திரம் தேய்க்கணும். வீட்டக் கூட்டணும். மாசம் வீட்டுக்குப் பதினாலு ரூபா. சாப்பாடு செளரியம், எந்த வீட்லயாவது கெடச்சுது. இதனால மாசம் நூறு ரூபா குதிரிச்சுது. பிள்ளாண்டான். அதை எடுத்துக் குடிச்சான். அடடே. நம்மம பணமே மவனுக்கு எமனாவபடாதுன்னு ஒருநாள். அவனைத் திட்டம் பண்ணுனேன். அன்னிக்குப் பாத்து ஆம்புடையான் அனுப்புனான்னு கைய சொரிஞ்சிகினு மவள் வந்தாள். அவள் கையில நூறு ரூபா வச்சேன். பிள்ளாண்டான், "இன்னா மே, ஒனக்கு பொண்ணுதான் ஒஸ்தியா. நான் கேட்டால் திட்டுறே. அவள் கேட்டா கொட்டுறேன்னு" சொல்லிட்டு, "என் வீட்ல இருக்காதம்"ேமன்னு கயித்தப் பிடிச்சு வெளியே தள்ளினான். ஒன்னோட வாரேம்மான்னு மகளண்ட சொன்னேன். அவள் யோசிப்பது போல் தாடையை தூக்கினாள். சரி. கொண்டான் கொடுத்தாங்கிட்ட