பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ஆகாயமும் பூமியுமாய். பாக்குறவளுக்கு பட்டேன். அதாவது இதே கூனு. இதே கும்புன மொகம். இதே ஓணான் உடம்பு. இன்னும் சொல்லப்போனால். இதவிட கோரம். ஏன்னா இப்போ முன் பல்லு ரெண்டு விழுந்துட்டு. அப்போ இது ரொம்ப நீண்டு கொஞ்சம் அகோரமாய்த் தோணிச்சுது. அப்படியும் எனக்கு பகவான் மாங்கல்ய பாக்கியம் கொடுக்கத்தான் கொடுத்தான். கிராமத்துல. தோப்பனார் சீர்வரிசையோட தான் என்னைக் குடுத்தார். ஆத்துக்காரர் நான் பிடிக்கலன்னார். எப்போ தெரியுமா? ரெண்டு பசங்க பிறந்த பிறகு! அப்போதான். அவருக்கும் ஒருத்தி கிடைச்சாள். பூஜையை முடிச்ச கையோடேயே எனக்கும் பூஜை கொடுப்பார். சகிச்சிக்கிட்டு இருந்தேன். ஆம்புடையான் கிட்டே அடிப்படுறதை அவமானமா நினைக்கல. ஆனா உடம்பால அவரோட அடிதடிய தாங்கிக்க முடியல. கிராமத்துல. தோப்பனார்கிட்ட வந்தேன். சின்ன வீடு. கூடப்பிறந்தவாள் ரெண்டு பேரு. அண்ணாவும் மன்னியும் சந்தோஷமாயிருக்கட்டு முன்னு. ஒரு கட்டை வண்டிக்குக் கீழேயே காலத்தக் கழிச்சேன். அப்புறம் தோப்பனார் காலமாகிவிட்டார். அம்மா... எப்போவோ சிவலோகம் சேர்ந்துட்டாள். மன்னி கரிச்சுக் கொட்டினாள், கரிச்சா வந்து, எல்லாம் கரியாச்சுன்னா. ஆம்புடையான்கிட்ட ஒழுங்கா குடித்தனம் பண்ணினால் தானே நோக்கு. கடுகு விலை தெரியும். இல்லன்னா இவ்வளவு தாளிப்பியா'ன்னு பொறிவாள். பயத்துல பல்லைக் கடிச்சேன். அவளுக்கு மடின்னா எனக்கு நிம்மதி. சமையல் அறைக்கு வரமாட்டாள் பாரு..." "இதுக்குள்ள தம்பி பெரிசாயிட்டான். இங்கேதான் வேல. அவனுக்கு இங்கே வந்து சமையல் செஞ்சுப் போட்டேன். அப்புறமா கல்யாணம் நடந்தது. அவன் ஆத்துக்காரி. ரொம்ப ரொம்ப நல்லவள். என்னை நல்லா வச்சிருந்தாள். நிறையும் தெரியல. குறையும் தெரியல. வருஷம் ஆகிக்கிட்டுப் போனது கூட தெரியாம. வருஷம்