பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 அப்பரும்-அப்பாவும் தாயும், மகளும் மெளனித்ததை, தடங்கல் தீர்ந்ததாய் நினைத்துக்கொண்டு, இசச்கியா பிள்ளை பூஜையறைக்குள் போனார். திரைச்சீலையை ஒரு பக்கமாய் தள்ளுவதற்கு, மறந்து, அதை இரண்டாய் மடித்து நிலைப்படிக் கம்பியில் சொருகினார். அதில் திரிபுரசுந்தரி காலும் கையும் குறுக்கப்பட்டு குறுகிக் கிடந்தாள். பூஜையறைக்குள் வந்த இசக்கியா பிள்ளை, எந்தச் சோதனையிலும் பூஜை நிறுத்தம் ஏற்படக்கூடாது என்று கடுக்கன் போட்ட அப்பா கிராமத்தில் உபதேசித்ததை நினைவுக்கு கொண்டுவந்து அந்த அறையே ஆகாயமும் பூமியும் என்பதுபோல் அண்ணாந்தும், தலை தாழ்த்தியும் பார்த்துக்கொண்டார். அந்த அறை அனைத்தையும் உட்கொண்ட பிரபஞ்ச அறையாய்த் தோன்றியது. வீட்டைக் கட்டும்போது அறுநூறு சதுர அடிக்குள்ளேயே தனியாய் ஒரு பூஜை அறை கூடாது என்றாள் மனைவி, இவர்தான் அவள் காலில் விழாத குறையாக விழுந்தார். அவள் மசியவில்லை. ஒருநாள் அவள் வெளியூர் போனபோது, மேஸ்திரிக்குக் குடிக்கப் பணம் கொடுத்து, இந்தச் சின்ன அறையைக் கட்டிவிட்டார். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கடப்பா பளிங்குக் கல்லை வாங்கியும் பொருத்திவிட்டார். அது நட்சத்திரக் குவியல்களைக் காட்டும் ஆகாய நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. இரண்டடி உயரத்தில், ஐந்தடி நீளத்தில், மூன்றடி முன் நோக்கிய அந்தப் பளிங்குக்கல்லில் மூன்று தெய்வப் படங்களைக் கொண்ட ஒரு படம். வலப்பக்கம் சுப்ரமண்யர் ஆலய மூர்த்தியாக ஆதிசேஷ முருகன் பாம்பின்மேல் இருக்கிறார். இடப்பக்கம் உடுப்பி கிருஷ்ணர், நடுப்பக்கம் தர்மஸ்தலா லிங்கம். பக்கவாட்டில் ஒரு பக்கம் அய்யப்பன், மறுபக்கம் திருத்தணி முருகன். இருசுவர் மடிப்புகொண்ட ஒரு மூலையில் மூகாம்பிகை. அம்மாவின் அருகே பிள்ளையார், இன்னொரு மூலையில் பஞ்சமுக அனுமான். அதற்கு அருகே இரு கரத்தில்