பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 79 நக்கீரன்-அவனைப் பற்றிப் பாடம் நடத்தாமல் இருக்க முடியும்!" மனைவியின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்து இசக்கியா பிள்ளை, மீண்டும் நெடி. மெளனம் நிலவியதைக் கண்டார். தெய்வ வழிபாடு, இப்படிப்பட்ட லோகாயத விவகாரங்களால் தடைப்பட்டதற்கு வருந்தி, தோப்புக்கரணம் போட்டுக் கொண்டார். அபிராமி அந்தாதியை எடுத்தார். கம்பெனி சகாக்களுடன் "தெய்வப் பயணம்' மேற்கொண்டபோது வாங்கிய புத்தகம். திருக்கடவூர் அபிராமிதேவியை அபிராமி பட்டர் பாடியதைப் பாடும் போதெல்லாம் அவரது குரல் தழுதழுக்கும். எலும்புருகிப்போகும். உடல் முழுதும், ஜோதியாவது போல் தோன்றும். அந்த அபிராமி பட்டருக்கு வராத துன்பமா? அவர் பட்ட பாட்டில். என் பாடு சிறுபாடு. "பரிபுரச் சீரடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் திரிபுரச் சுந்தரி, சிந்துர மேனியள், தீமை நெஞ்சில் புரிவர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்பு சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே” இசக்கியா பிள்ளையின் பக்திப் பரவசத்தை தடுத்தது, மீண்டும் தாய்-மகள் யுத்தம். "போராடும் முன்னாலேயே தோல்வியை ஒப்புக் கொண்டால் என்னம்மா அர்த்தம்? இன்ஸ்பெக்டர் கிட்டே சொல்லுவோம்! அவர் கேட்கேட்டா அஎபிஸ்டெண்ட் கமிஷனர்! அவரும் சரிப்படாட்டா டெப்டி கமிஷனர்! அப்புறம் கமிஷனர்: டைரக்டர் ஜெனரல் இவங்களாலயும் முடியாவிட்டால் முதலமைச்சர். இல்லாத பொண்ணுங்களை என்ன வேணுமுன்னாலும் செய்யலாமுன்னு நினைக்கிறாங்க பாருங்க இந்தமாதிரிப் பயல்களை விடப்படாதும்மா!"