பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xiii

மூர்(1779 - . 1852

அயர்லாந்து தேசத்தினர். இசையில் வல்லவர். இவர் இயற்றிய கீதங்களில் 'தனி மலர்' பெயர் பெற்றது. ஒரு சமயம் பைரன் என்னும் கவிஞரோடு ஆற்றங்கரையோரத்தில் பேசிக் கொண்டிருந்தார். புகழ் எது என்பதைப் பற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது படகு ஒன்றில் பலர் மூரின் கீதங்களேப் பாடிக்கொண்டு போனார்கள். அதைக் கேட்டதும் பைரன் குதித்தெழுந்து 'ஆஹா ! அதுதான் புகழ் !' என்று மூரின் தோளில் கையை வைத்துக் கூறினார். அவ்விதம் அவருடைய கீதங்கள் அனைவராலும் போற்றப் பெற்றன.

ராஸெட்டி (1830 - 1894)

முழுப் பெயர் கிறிஸ்டின ராஸெட்டி. சென்ற நூற்றாண்டில் ஆங்கில நாட்டில் திகழ்ந்த பெண் கவிஞர்களில் ஒருவர். பக்தி ரசம் மிகுந்த பாடல்கள் செய்துள்ளார்'

ராபர்ட் பர்ன்ஸ் (1759 — 1796) ஸ்காட்லந்து தேசத்து மகாகவி. கீதங்கள் இயற்றுவதில் உலகக் கீர்த்தி பெற்றவர். பாமர மக்களும் பரவசமாகும், வண்ணம் செய்தவர். சாதாரண விவசாயியாக இருந்தார். காதலைப் பற்றி இவரைவிட அதிக அழகாயும் உணர்ச்சியாயும் பாடியவர் கிடையார் என்று அறிஞர் போற்றுகின்றனர்.

ஜே.ஆர்.லவல் (1819 - 1891)

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான இவருடைய சுதந்திர கீதங்கள் கீர்த்தி பெற்றவை. இலக்கிய விமரிசனத்தில் பெரும் புகழ் கொண்டவர். ஸ்பெயினிலும் இங்கிலாந்திலும் அமெரிக்க ஸ்தானிகராக இருந்தார்.

லாங்பெலோ (1807 - 1882) அமெரிக்க மகா கவிகளில் ஒருவர். இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். ஏராளமான கவிகள் செய்துள்ளார்,அவை ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவை.