பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







வால்ட் விட்மன்

அன்னை

I

அப்பா, வயலிலிருந்து வாரும்,

இதோ நம் பீட்டரின் கடிதம் !

அம்மா, வாசலுக்கு வாரும்,

இதோ உம் அருமை மகன் கடிதம் !

II

அதோ பச்சைப் பசேலென்ற மரங்கள்

குளிர் நிழல் கொடுத்து நிற்கின்றன !

தோப்புகளில் ஆப்பிள் கனிந்து தொங்குமே !

கொடிகளில் திராட்சைக் குலைகள் கொஞ்சுமே !

வானில் தெளிவு - மண்ணில் அமைதி,

எங்கும் அழகு - எங்கும் செழுமை !