பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



III

காதலன் அருகில் அமர்ந்து பாடும்
அழகான சின்னப் பறவையே
என் இதயத்தை ஏன் வதைக்கிருய்!
உன்னைப் போலவே உட்கார்ந்திருந்தேன்,
உன்னைப் போலவே பாடி மகிழ்ந்தேன்,
இந்தப் பீடை வருமென்று அறியேனே

IV


மரங்கள் பிணந்து நிற்பதைக் காண
அழகான நதிக் கரையில் அலைந்துளேன்,
ஒவ்வொரு பேடும் தன் காதலனைப் பாடும்,
நானும் என் காதலனைப் பாடுவேன்.

சிந்தையில் கவலை நீங்கி இன்புற்று
ரோஜா மலர் ஒன்று பறித்தேன்,
என மாயக் காதலன் வந்தனன்,
என் மலரைப் பெற்று ஏகினான்;
முளளே என்னிடம் எஞ்சி நிற்கும்.