இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொய் உண்மையை நாடுகிறது,
வௌவால் சூரியனைக் கேலி செய்கிறது.
இந்த வேடிக்கையைப் பாருங்கள் !
III
தற்கால உலகின் கிண்ணத்தில்
நான் பார்ப்பதென்ன ? - விஷம்.
ஆம், அதில் பாம்புகள்
சுருண்டு கிடக்கின்றன !
IV
சிம்மத்தின் இரத்தம் சில சமயம்
பலவீனர் தேகத்திலும் ஓடுவதுண்டு
நீர்த் துளியிலும்
நெருப்பின் உணர்ச்சி தோன்றுவதுண்டு !
எழுந்திடுக !
74