பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flagellant

212

flash


flagellant (n) - தன்னைத் தானே கசையால் அடித்துக் கொள்பவர், பிறரை அடிப்பவர். (சமய நோன்பு, பாலின்பம் காணல்). flagellate (v) - கசையால் அடி.(சமய நோன்பு, பாலின்பம்). flagellation (n) - கசையாலடித்தல்.
flagon (n) - குடிகலம்,குடி பொருள் அளவு.
flagrant (a) - படுமட்டமான, பட்டாங்கமான. flagrancy (n) -படுமட்டம்.flagrantly (adv).
flail (n) - சூட்டிக்கும் கோல்,சாட்டை.
fail (n) - அசை, உதறு, அடி.
fair- செவ்வி, நுண்திறம், ஒட்பம்.
flak (n) - எதிரி வானூர்தியைச் சுடும் துப்பாக்கிகள்.flak jacket - உலோகம் பாவிய கனத்த பாதுகாப்புறை, சட்டை.
flake (n) - சிம்பு, குச்சி, சுளை, காம்பு, விரல் போன்ற துண்டு. (v)- படல் படலாக வெளிப்படு, உதிர், உறங்கு.flaky (a)- படல்களாலான.
flambeau (n) -தீவெட்டி.flambeaux (pl).
flamboyant (a) - பகட்டான,ஒளிர்நிறமுள்ள. flamboyance(n)flamboyantly (adv).
flame (n) - தீக்கொழுத்து, சுடர்,ஒளிர்நிறம், செறிவான உணர்ச்சி, காதலன், காதலி. flame test - தீச்சுடர் ஆய்வு.flame(v)- சுடர்விட்டெறி, தீச்சுடர்போன்று ஒளிவிடு, சினந்தெழு, காதல் வெறியூட்டு. fury and flame.flaming (n)-எழுச்சி யுள்ள.

212

flash

flamingo (n) - செந்நாரை.
flange (n) - உயர்த்தப்பட்ட புற முனை (இருப்பு வழிச்சக்கரம்).
flank (n) - விலாப்புறம், புடைப்புற அணி, (v) - பக்கவாட்டில் தாக்கு.
flannel (n) - மென்கம்பளம்.
flap (n) - தொங்கல், மடிப்பு, தகட்டினால் அடித்தல், தொப்பென்னும் ஒலி.flap(v)- அசைந்தாடு, தட்டைப்பொருளால் அடி, குழம்பு, உணர்ச்சிமிகு. flapjack (n) அடை, ஒருவகைப்பிஸ்கோத்து.
flapper (n) - ஈஅடிப்பி, நாகரிகப்பெண்மணி (1920கள்).
flare (v) - சட்டெனச் சுடர்விட்டெரி, ஒளிர், அடியில் அகலமாகு. flare (n) - சுடரொளி, மின்னொளி, அடியில் அகலல். flare-up (n) -சடுதி அழல், கிளர்ச்சி, சீற்றம்.
flash (v) - பளிச்சென்று மின்னு, சட்டென மனத்தில் தோன்று,மின்னச்செய், செய்தியனுப்பு. (n) - பளிச்சொளி, மின்னல், சட்டெனத் தோன்றும் எண்ணம். flash-back (n) - முன்காட்டும் பின்காட்சி.flash-bulb (n) - பளிச்சொளி மின்குமிழ். flash-flood (n) - சடுதி வெள்ளம். flash-card (n)-காட்சியட்டை. flash-gun (n) -பளிச்சொளி குழல்.flash-light (n) -பளிச்சொளி, வெளிச்சம். flash-point (n) - எரிநிலை,சீற்றம் ஏற்படும் நிலை.