பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

approve

27

archaic



approve (V) - ஒப்பு,ஒப்புதல் அளி. approval (n) - ஏற்பு,ஒப்பபுதல். approved (a) - ஏற்றுக் கொள்ளப் பட்டது. approved school:இளைஞர் சீர் திருத்தப் பள்ளி. approver (n)குற்றம் ஒப்பிய சான்றுரைஞர்.
approximate (a) - கிட்டத்தட்ட, தோராய (v) தோராயமாக இரு. approximately (adv) approximation (n) - தோராயம்.
appurtenance (n) -உடைமைப் பொருள்கள், உடைமைக்கு உரிமை, தட்டுமுட்டுகள்.
April - ஏப்ரல் திங்கள்(பங்குனி 15 முதல் சித்திரை 15 வரை) April fool.ஏப்ரல் முட்டாள் April Fools' Day: ஏப்ரல் முட்டாள் நாள்.
a priori (a,adv) -காரணத்திலிருந்து காரியமாக.x a posteriori.
apron (n) - மேலாடை.
apropos (adV, a) - தகுதி,தகுதியாய், ஏற்புடைய. apropos of -குறித்து,பற்றி.
apt (a) - பொருத்தமான aptly(adv).
aptitude (n)-இயற்கைவிருப்பம்,தகுபாடு, aptitude test - தகுபாட்டுத் தேர்வு.
API - முன்செல் பயணித் தொடர்வண்டி, முபதொவ.
aquarium (n) -நீருயிர் வளர்ப்பகம்.
aquatic (a) - நீர்வாழ்.aquatics (n) - நீர் விளையாட்டுகள்.
aqueduct (n) - கட்டுக் கால்வாய், நீர்த்தாம்பு.


aqueous(a) -நீர் கலந்த.aqueous solution (n) - நீர்க் கரைசல்.
aquiline (a) - கழுகு போன்ற. aquiline nose - கழுகு மூக்கு. aquiline eye (a) -கழுகுப் பார்வை.
Arab (n) - அராபியர்.
arable (a) - உழத்தக்க (n)உழத்தகுந்த நிலம்.
arachnid (n) -சிலந்தி வகை விலங்கு
arbiter (n)- நடுவர்.
arbitrary (a) - ஒரு தலை முடிவான, தன் முனைப்பான,
arbitrate (v) - நடுநிலைத்தீர்ப்புச் செய். arbitration (n) - நடுவர் தீர்ப்பு. arbitrator (n)- நடுவர். arbor (n) - மரப்பந்தல், கொடிப்பந்தல், பூம்பந்தல்.
arboreal(a)-மரம்வாழ்(அணில்)
arc (n) - வில் வளைவு, வில், arc lamp - மின்வில் விளக்கு, பிறை விளக்கு.arc Welding - மின்வில் பற்றவைப்பு.
arcade - வளைகூரை அங்காடி,வளாகம்.
arcadia (n) - சோலை வளம், இயற்கை வள நாடு, arcadian (a) நாட்டுப்புற
arch (n) -வளைவு,முகடு
archaeology (n) -தொல்பொருளியல், archaeological (a) archaeologist (n) - தொல் பொருளியலார்.
archaic (a) - பண்டைக் காலம் சார், வழக்கில் இல்லாத."Thou art" is an anarchaic form of "you are"