பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rubber

554

rumour


rubber (n) - மும்முறை ஆட்டம் (சீட்டு).
rubber-neck (v)- உற்றுப் பார் (n)- உற்றுப் பார்ப்பவர்.
rubbish (n) - குப்பை,பயனற்ற கருத்துகள்.
rubric (n) - தலைப்பு.
ruby (n) - சிவப்புக் கல்.ruby Wedding - 40 ஆவது ஆண்டுத் திருமண விழா.
ruck (n) - பொதுமக்கள், தேவையில்லா மடிப்பு (துணி) (v) - மடிப்பு விழு, சுருங்கு.
rucksack - சுமப்புப் பை,முதுகுப் பை, ஒ.knapsack, backpack, haversack.
ruckus (n) - அமளி.
ructions (n) - சீற்ற எதிர்ப்பு.
rudder (n) - சுக்கான்.
ruddy (a) - சிவந்த (கன்னங்கள்)
rude (a)- நாகரிகமற்ற, முரட்டுத் தனமான இழிவான வன்முறை. rudely (adv) (x gentle) rudeness (n).
rudiment (n) -அடிப்படைகள்,முதிர்ச்சியடையா நிலை, பயனற்ற உறுப்பு.
rudimentary (a) - முதிர்ச்சியடையா,தொடக்க, அடிப்படை.
rue (v) - வருந்து (n) - பசுமை மாறாக் குற்றுமரம். rueful (a).
ruff(n) - கழுத்துச் சிறகு, கழுத்தணி(v) - துருப்புச் சீட்டு போடு.
ruffian (n) - முரடன், கொடியவன்.
ruffle (v) - சுருக்கம் உண்டாகச் செய், கலக்கு, குழப்பு. (n) - குழப்பம், rug (n) - கம்பளம், விரிப்பு, தரைப்பாய்.

rumour

Rugby football - ரக்பி கால் பந்தாட்டம்.
Rugby league - ரக்பி குழு அணி
Rugby union - ரக்பி கழகம்.
rugged (a) - கரடுமுரடான,சிதைந்த, வலுவான, நாகரிகமற்ற. ruggedly (adv).
rugger (n) - ரக்பி கால் பந்து.
ruin (n) - அழிவு, சிதைவு (v) - அழி,சிதை ruinous (a)
rule(n)- விதி, சட்டம், ஆட்சி, வரி ஒழுங்கு, வரைகோல் (v) - ஆட்சி செய், விதி செய், கோடு வரை.
foot-rule - அடிவரைகோல்.ruler-ஆட்சியாளர், வரைகோல். ruling (n) - தீர்ப்பு (தலைவர்) கோடு போடுதல் (a) ஆட்சி செய்யும்.
rum (n) - வெல்லச் சாராயம்.
rumble (v)- உறுமு, கடகட என்று முழங்கு, (n) உறுமல், முழக்கம்.
ruminant (n) - அசை போடும் விலங்கு.பசு. ruminate (v) - அசைபோடு.
rummage (n) - கலைத்துப் போட்டுத் தேடு (n) கலைத்துப் போட்டுத் தேடுதல், பல்பொருள் தொகுதி. rummage sale - பல்பொருள் தொகுதி விற்பனை (உதவி நிகழ்ச்சி).
rummy (a) - வியப்பூட்டும் (n) - ஒரு வகைச் சீட்டாட்டம்.
rumour (n) - புரளி,அம்பல் செய்தல் (v) - புரளி கிளப்பு. rumoured (a) - புரளியான.