பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subscript

611

Subterranean


subscript (n) - சிறிதாக எழுதப்படும் அடையாளக் குறி.
subscription n. (subscribe) - செய்தித்தாள், கழகங்கள், பொதுநல நிலையங்களுக்கான) கட்டணம் செலுத்துதல், கட்டணம், பங்குவரி, (பங்கு வரிகளாக இடும்) கையொப்பம், கூட்டுக் கோரிக்கையின் கீழ்க் கையொப்பம்.
subsequent (a) - பின்னர் வருகிற, அடுத்தபடியான,Sub-sequence n. Subsequently adv.
sub serve (v) - சார்பாயுதவு,உடந்தையாக உதவு.Subservient (a)- உதவுகிற, அடிமை போல் நடக்கிற. Subservience n .
Subside (v)- தணி,அமைதியாகு,கீழாகு.n. Subsidence.
subsidiary a. (Subsidy) - உதவியாயிருக்கிற, முக்கியமல்லாத. n. துணைப் பொருள், உதவி யாள்; subsidiary alliance n. (வரலாறு) துணைமைத் தொடர்பு.
subsidy (n) - பண உதவி, ஆதரவுத் தொகை, ஆதரவுக் கூலி, வரி, கப்பம், திறை, ஊக்க உதவி. v. subsidize,-se.
subsist (v) - உயிர்பிழைத்திரு, தொடர்ந்திரு. Subsistence n. பிழைப்பூதியம்,பிழைப்பூதியம்.
Subsoil (n) - கீழ்மண்.


subspecies (n)- இன உட்பிரிவு
substance (n) - பொருள்,சுருக்கம், செல்வம்.a. Substantial, 1. திடமாயடைந்துள்ள 2. உண்மையாயுள்ள. 3. போதுமான அளவுள்ள. Substantially adv. substantiality n. Substantiate v.உறுதியாக்கு.
substantive (n) - (இலக்) எழுவாய்ச் சொல், (மூவிடப் பெயருள்ளிட்ட) பெயர்ச்சொல்).
substitute (V) - பகரமாகவை,ஒன்றனிடத்தில் ஒன்று வை, n. பகரமானவர், பதிலாள், பகர மானது, பதிலானது, பகரப்பொருள். substitution n. பகர அமைவு, பகர அமைப்பு.
substratum n. (pl.-ta). கீழாயுள்ள படுகை, ஆதாரம், அடிப்
substructure (n) - கடைகால், அடிப்படை, கீழ்க்கட்டுமானம்.
subsume (v) - உட்கொண்டிரு. subsumption n.
subtenant(n)- கீழ்வாரியக்காரர்,கீழ்க்குடிக் கூலிக்காரர், கீழ்க் குத்தகைக்காரர், subtenenancy n.
subtend (v) - (வடிவியல்) எதிரிணையாய மைந்திரு.
subterfuge (n) - மறைசெயல்,சூழ்ச்சி, குள்ளநரித்தனம்.
subterranean, Subterraneous a. கீழ்நில, நிலவடியான, நிலவறை போன்ற.