பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cheep

78

china



cheep (n) - இளம்பறவை கீச்சொலி, (v) கீச்சொலி எழுப்பு.
cheer (n) - மகிழ்ச்சி,ஊக்குரை. (w) மகிழ்வு,ஊக்குவி. cheerful (a).
cheese (n) - பாலாடைக் கட்டி,பாலேடு.
cheetah (n) - சிறுத்தைப்புலி.
chemistry (n) - வேதி இயல், chemist (n) - வேதி இயலார். chemical (a).chemical change - வேதிமாற்றம்.
Cheque (n) - காசோலை. cheque book - காசோலைப் புத்தகம்.
chequer (v) - கட்டங்களிடு,மாறுபாடுகள் உண்டு பண்ணு. chequered. (a)
cherish (v) - சீராட்டு, போற்றி வளர், பராட்டு, கொண்டாடு.
cheroot (n) - சுருட்டு.
cherry (n) - சிறு பழ வகை.
cherub (n) - தெய்வக் குழந்தை, அழகிய குழந்தை, அரமகவு.
chess (n)- சதுரங்க ஆட்டம்.
chest (n} - பெட்டி,மார்பு, chest pain- மார்பு வலி.
chestnut (n) - மரவகை,மரக் கொட்டை வகை (a) - கருஞ் சிவப்பு நிறம்.
chevalier (n) - வீரன்,குதிரை வீரன்.
chew {v}- பற்களால் அரை, சவை அசை போடு.
Chicanery (n)- உருட்டுப்புரட்டு,ஏமாற்று.


Chick (n) - கோழிக்குஞ்சு.chicken (n) - கோழிக்குஞ்சு, பறவைக்குஞ்சு.
chichory (v)- காப்பி மாற்று ஆகப் பயன்படும் செடிவேர்.
chide (v) - கடிந்துசொல், கொள்
Chief (a) முதன்மை,தலைமை. Chief Minister - முதலமைச்சர், chief (n) - தலைவர். Chiefly (n) - முதன்மையாக.
chieftain (n) - (குலமரபுத்) தலைவன்.
child (n) - குழந்தை, மகவு, பிள்ளை.Childhood (n) குழந்தைப் பருவம்.
chill - குளிர்ச்சி, காய்ச்சல் நடுக்கம், உணர்ச்சி உறைவு. (v) - குளிரச்செய், ஊக்கங்கொடு. chilly (a)- குளிர்ச்சியான chillness (n) - குளிர்தன்மை, தண்மை.
chilli,chilly (n) - மிளகாய்.
chime (n) - மணிகள் ஒத்து இசைத்தல் (v) - இசைவாக மணிகளை ஒலிக்கச்செய்.
chimera (n) - கற்பனை விலங்கு வகை, விந்தைக் கற்பனை,chimerical(a) - விந்தைக் கற்பனையான, தெளிவற்ற.
chimney (n) - புகைபோக்கி.chimney pot - புகை போக்கிக் குழாய்.
chimp, chimpanzee (n) - ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்கு.
chin (n)- நாடி,மோவாய், தாடை. upto the chin - ஆழ்ந்து ஈடுபட்டிரு.
China (n) - பீங்கான், சீனநாடு,பளிங்கு.