________________
16 ஆசிய ஜோதி நகரை அலங்கரித்தல் வேறு இவ்வரிய பேறெல்லாம் எய்தற் கான இம்மகனைப் பெற்றுமகிழ் கொண்டு மன்னன், திவ்வியமா நகரெங்கும் சிறப்புச் செய்து . திருவிழாக் கொண்டாட வேண்டும்" என்றான், வேறு மாநகர் வீதி விளக்கின்றார் - குலை வாழைகள் வாசலில் கட்டிதின்றார்; வானுயர் தோரணம் தட்டுநின்றார்-எங்கும் வாசமெழு பன்னீர் வீசிநின்றார். கோல மிட்டார்கொடி தூக்கிவிட்டார்-உயர் கோபுரம் எங்குமே தீபமிட்டார்; சாலை கடை கோயில் வீதியெலாம்-- மலர்த் தாமங்களால் பந்தல் செய்துவைத்தார். பக்தியாய்ப் பூரண கும்பம்வைத்தார்-முனைப் பாவிகைப் பக்கம் பொலியவைத்தார்; குத்து விளக்குகள் ஏற்றிவைத்தார்-முத்துக் கோவைகள் எங்குமே தொங்கவிட்டார். வேடிக்கைகள் தேகப் பயிற்சிகள் காட்டிடுவார்---சிலர் செப்படி வித்தைகள் செய்திடுவார்; வேக அரவைவிட் டாட்டிடுவார்-சிவர் விண்ணில் வடங்காட்டித் தாவிடுவார். 25 26 27 28 29