பக்கம்:ஆசிய ஜோதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புத்தர் அவதாரம் 17 வாளினை வீசி விளையாடுவார்—சிலர் மாறியெழும் ஊஞ்சல் ஆடிடுவார்! தாளிற் சதங்கை இசைதரவே-பல தாசிகளும்சதிர் ஆடிடுவார். மானைப்போல் வேடமிட் டாடிடுவார்.-சிலர் வன்கரடியாட்டம் ஆடிடுவார்; கானப் புலியைப் பழக்கி - விளையாட்டுக் காட்டிடு வார்நகர் வீதியெலாம். மல்ல யுத்தம்சிலச் செய்திடுவார்- கோழி வாத்துக்கள் சண்டைக்கு விட்டிடுவார்; வெல்லுந் தகர்களைத் தாக்கவிட்டுச்-சுற்றி வேடிக்கை பார்த்துக் களித்துநிற்பார். ஒத்த குழலிசை ஊதிடுவார்-கசிந்து உள்ளம் உருகவே பாடிடுவார்; மத்தளம் கொட்டித் தலையசைப்பார்-வீணை வாசித் தமுதம் வடித்திடுவார். வணிகர் குழந்தையைக் காண வருதல் தேசம் புகழும் குலவணிகர்-மன்னன் செல்வக் குமரரைக் கண்டிடவே, ஆசையெழத்தங்கத் தாவங்களில்-பல அற்புதப் பண்டங்கள் ஏந்திவந்தார். கம்பளி சால்வை கரும்படங்கள் வாசக் கத்தூரி பச்சைக்கற் பூரங்களும் 30 31 32 33 34 அம்பொன் மணிமுத்து மாபைகளும்-வகைக்கு ஆயிர மாயிரம் கொண்டுவந்தார். 35 -8-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/18&oldid=1501119" இலிருந்து மீள்விக்கப்பட்டது