இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
அருள் உரிமை சேவகன் மொழிஎலாம் சித்தார்த்தன் கேட்டு, இயம்பிய மறுமொழி இயம்பக் கேண்மின்: சித்தார்த்தன் மறுமொழி (வேறு) ‘எய்த அம்பினால் -பறவை இறந்து வீழ்ந்திடுமேல், எய்த வர்க்காகும் -உரிமை; யாதும் ஐயமில்லை. நீண்ட சிறகினிலே-விசைதான் நின்றி ருப்பதல்லால், மாண்ட தில்லை அன்னம்-உயிர்த்து வாழு கின்றதப்பா! சந்தேகம் வேண்டாம்-அதனைத் தரமு டியாதப்பா! எந்த உயிரையும்-காப்பது என் கடமையப்பா!" தேவதத்தன் கூறுதல் சாற்றும் உரைகேட்டுத்-தேவு தத்தனும் ஓடிவந்து, சீற்றம் எழுந்தவனாய்-நின்று செப்பும் மொழியிதுவாம்; "மடிய நேர்ந்தாலும் உயிர்த்து வாழ நேர்த்தாலும், படியில் வீழ்ந்திடுமேல் - பறவை பாணம் எய்ந்தவர்க்காம். 2 3 5