இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24 ஆசிய ஜோதி
என்கை அம்பினால் - விழுந்த
இப்ப றவையினை,
சங்கை இல்லாமவ்-இங்கே
தந்திடுவாய், ஐயா!"
7
சித்தார்த்தன் மறுமொழி
சொன்ன மொழிகேட்டான்-ஐயன்
துன்பம் மிக அடைந்தாள்;
அன்னப் பறவையினைக்-கண்னத்தோடு
அணைத்து வைத்துக்கொண்டான் 8
பாரில் உயிரையெல்லாம் - அருளால்
பாது காக்கவந்தோன்,
சீரிய நன்மொழிகள் - உள்ளம்
தெளிந்து கூறுகின்றான்: 9
"இல்லை இல்லையையா! - பறவை
என்பறவை ஐயா!
வல்லடி வழக்கு—நீயும்
வளர்க்க வேண்டாம், ஐயா! 10
தொல்லுலகமெல்லாம் - அருளால்
சொந்த மாக்கவந்தேன்;
வெல்லும் பொருள்களில்-முதலில்
வென்ற பொருளிதாம், 11
எம்ம னிதருமே-உளத்தில்
இரக்க முற்றிடயான்.
செம்மை நெறியினை-நன்கு
தெரிந்து கூறிடுவேன்.
12