பக்கம்:ஆசிய ஜோதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருள் உரிமை துன்பம் அண்டாமல்--அதனைத் துரத்தி ஓட்டிடுவேன்; இன்பம் இவ்வுலகில் - நிலைக்க என்றும் வென்றிடுவேன்! மனிதர் மட்டுமல்ல-உலகில் வாழும் எவ்வுயிரும், இளிய வாழ்வடையும் வழியை இனிது காட்டிடுவேன், என்னு ரைகளைநீ - மறுக்கின், இன்றே இப்பொழுதே, மன்னும் நீதிமன்றம்- ஏறி வழக்கு ரைப்போம், ஐயா" நீதிமன்றம் அடைதல் (வேறு) இருவரும் அப்பால் இசையா ராகி, அறநூல் கற்றோர் அறிவிற் பெரியோர், நடுநிலை நீதி நன்கு கண்டோர் கூடிய மன்றில் குறைகொண்டு ஏகினர். ஏகவே, வழுவற இருதலை வழக்கும் கேட்டு, மன்றுளோர் தம்முள் வாதம் செய்தனர்; இதுவே நீதியென்று இயம்பினர் சிலரே; அதுவே நீதியென்று அறைந்தனர் சிலரே; யாதும் துணியாது இருந்தனர் சிலரே; முடிவில், 25 13 14 13 (5) (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/26&oldid=1501127" இலிருந்து மீள்விக்கப்பட்டது