இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26 ஆசிய ஜோதி
இந்நாள் வரையிலும் எவருமே அறியாப்
புலமை மிக்க புரோகிதன் ஒருவன்.
எழுந்து நின்று, யாவரும் கேட்க, 16
புரோகிதன் கூறுதல்
வேறு
'உயிரைக் கொன்றிடவே -முயலும்
ஒருவ னுக்கு அந்த
உயிரின் மேலேதும் - உரிமை
உண்டோ? கூறும் ஐயா! 17
உயிரைக் காப்பவனே- என்றும்
உயிர்க்கு உடையவனாம்;
அயர்வு வேண்டாம், ஐயா!-இதுவே
அறநூல் விதி ஐயா! 18
இன்னும் வீண்வாதம் -பேசி
இருப்பதேன்! ஐயா!
அன்னம் சித்தார்த்தன்-பொருளாம்
ஐய மில்லை, ஐயா' 19
வேறு
என்று நீதி எடுத்துண ரச்செய்து
மன்றி லிருந்து மாய் மாக
மறைந்து போயினன்; மறையும் அந்நேரம்,
பையர வொன்று பதுங்கி அவ்வழி
ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன்,
இற்சில காலை தேவரும் இந்த
வடிவந் தாங் வருவதுண்டு என்பரால்!
யாதோ உண்மை? யாவரே அறிவார்? 20