30 ஆசிய ஜோதி அழகி எவளால் அவனது திருமுகம் வாட்டம் நீங்கி மலர்ச்சி பெறுமோ அவளே ஐய! நம் அரசிளங் குமரன் வாழ்க்கைக் குரிய மனைவி யாவாள். காதல் கொண்டவன் காதற் கண்ணால் கண்டு தெரிந்த காரிகை யோடு வாழ விரும்புதல் வையகத்து இயல்பாம்" என்று கூறி இருந்தனன், இதுவே நன்று நன்றென நவின்றனர் யாவரும் அப்பால், "திக்கெலாம் புகழும் திருவோ லக்க மண்டபம் அதனில் மகிழ்ச்சி தரும்ஓர் காட்சி காணக் கருதினன் மன்னன், அதனால், இத்நாட்டுள்ள எழில்மிகு கன்னியர் அனைவரும் நாளை அரண்மனைக்கு ஏகுமின். அழகிய கன்னியர்க்கு அரனெங் குமரன் பரிசுகள் பற்பல பரிவொடு வழங்குவன்; வனப்பில் மிக்க மங்கையர் மணி இப் பாரெலாம் புகழும் பரிசினைப் பெறுவர்; ஈதுஎம் இறைவன் இட்ட கட்டளை'* என்று மன்னவன் ஏவலர் ஒருநாள் பட்டண மெங்கும் பறைகள் சாற்றினர். அதுகேட்டு, அந்நக ரத்துள அழகிய கன்னியர் வைகறை எழுந்து மஞ்சனம் ஆடி ஆடை அணிகள் அழகாய் அணிந்து கூந்தல் வாரிக் கொண்டை முடித்து மல்லிகை முல்லை மாலை குடி வடிவேல் விழிக்கு மையும் இட்டுத் 90 95 100 105 110 115
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/31
Appearance