காதல் பிறந்த கதை நிறுத்தி, "ஐயா! நின்னுளம் விரும்பிய பருவ மலரைப் பறித்துக் கொள்'* எனில் அவன், இன்பம் அறியா இளைஞன் ஆதலின், புன்னகை புரிந்து, புதுமலர் ஒன்றும் தீண்டாது அப்பால், சென்றிடில் என்செய்வோம்;" 65- என்று கூறினன். இவ்வுரை கேட்ட அமைச்சருள் ஒருவன் அறிவில் சிறந்தோன் "அம்புவி ஆளும் அரச! கேண்மோ! தொடுசரம் உடலைத் துளைத்திடும் மட்டுமே முடங்குளைச் யேம் முழங்கித் திரியும்; மங்கையர் அழகிய மதிமுகம் கண்டு மயங்கா மனிதர்இவ் வையகத்து இல்லை; உதய குமரியை ஒத்தஓர் கன்னியின் மைவிழி கண்டு மயங்குவன் நின்மகன்; ஐயம் இல்லை ; ஆதலின் அடியேன் செப்பும் காரியம் செய்வது நலமாம். விரைவில் இங்கொரு விழாக்கொண் டாடுக. விழாவுக் காகஇவ் வியனக ரத்துள் அழகிய கன்னியர்க்கு அழைப்பு விடுக்க அப்பால், சாக்கிய நாட்டுத் தனிச்சிறப் புடைய ஆடல் பாடல் அனைத்திலும் அவர்கள் கற்ற திறனெலாம் காட்டச் செய்க, செய்தபின், அழகில் இனமையில் ஆடல் பாடலில் சிறந்தவர் தமக்குச் சிற்சில பரிசுகள் நின் மைந்தன் கையால் வழங்கிடச் சொல்க, பரிசுகள் பெறஅவன் பக்கம் வந்துசெல் 29 70 75 80 83.
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/30
Appearance