பக்கம்:ஆசிய ஜோதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சித்தார்த்தன் துறவு [பள்ளியறையில் யசோதரை சுனாக் கண்டு 'காலம்வந்தது" என்று வாய் வாய் புலம்புகிறாள். சித்தார்த்தன் அதைக் கேட்டுக் கவலையிலிறங்கி, வாளில் நட்சத்திரங்களைப் பார்க்கிறான். காலம் வந்தது என்றறிந்ததும் துறவு துணிகிறான்.) பள்ளி யறையில் பஞ்சனை மீதில் - அங்கையற் கண்ணி யசோதரை அயர்ந்து -கண்வளர் வேளைஓர் கனவு கண்டு, "வந்தது காலம் வந்தது' எனவே · மயங்கிப் புலம்பினன்; வார்த்தை கேட்டு; விரைவில் எழுந்து வெளியில் இறங்கி, மன்னர் குமரன் வானை நோக்கினன். சந்திரன் கடகம் தங்கி யிருந்தனன், வானில், மற்றைக் கோள்களும் மற்றைய நிலைகளில் ஒத்து நின்று அங்கு உரிய காலம் உரிய {பூணத் உதித்த தென்ன உணர்த்தின; அவைஎலாம் அருள்வடி வாகிய அண்ணலை நோக்கி, "இரவும் இதுவே, இரவும் இதுவே; பெருமை பெறும்வழி பேணுகின் றனையோ? தன்மை தரும்வழி நாடுகின் றனையோ? மணிமுடி தாங்கி மன்னர் மன்னனாய் நீள்நிலம் புரக்க நினைக்கின் றனையோ? உலகி லுள்ள உயிரெலாம் உய்ய நாடும் இழந்து நகரும் இழந்து வீடும் குடியும் விட்டவ னா தன்னத் தனியே தரணியின் மீதுஓர் . 80 15 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/38&oldid=1502292" இலிருந்து மீள்விக்கப்பட்டது