________________
சித்தார்த்தன் துறவு நோய்வாய்ப் பட்டு நொந்திடு துயரோ துரைதிரை மூப்பால் நண்ணுந் துயரோ மாறாக் கொடிய மரணத் துயரோ 41 -சனன மரணச் சக்கரம் கழன்று பின்னும் பின்னும் பிறந்து பிறந்து 120 உயிர்கள் அடையும் ஓயாத் துயரோ- யாதும் ஒருதுயர் இம்மி யளவும் நீங்கி எவரும் நித்தியானந்த வாழ்வடைந்து இங்கு வாழ்வதும் உண்டோ? அருமை மங்கையர் அன்பு நிறைந்து 125 நோற்கும் பற்பல நோன்புக ளாலும், பாடும் தோத்திரப் பாடல்க ளாலும் எய்திய நன்மை யாதும் உண்டோ! அவர், தூர்த்து மெழுகித் துப்புர வாக்கித் துளசி மாடம் தொழுவத னாலும், பாலும் பழமும் பணிகா ரங்களும் பக்தி யோடு படைப்பதனாலும் 130 பேறு காலம் பெறுநோக் காடு கொஞ்ச மேனும் குறைந்தது உண்டோ? 135 திருந்திய நல்ல தேவரும் உண்டு; தீயரும் அவருள் சிற்சிவர் உண்டு; உண்மை இதுவென்று உணர்வதும் அரிதாம், ஆயினும், யாவரும் செய்கையில் எளியவ ரேயாம். 140 முன்னைப் பிறப்பும் முடிவும் அப்பால் பின்னைப் பிறக்கும் பிற பின் விளைவும், ஐயம் இன்றி அறிகுவ ரேனும், இவர், சனன மரணச் சக்கர மதனில் 145