42 ஆசிய ஜோதி சிக்கிச் சுழன்று திகைப்புறு வோரே, உலகில் வாழும் உயிரின் பிறப்பிடம் அறிவிற் கெட்டா தாயினும், அவ்வுயிர், படிப்படி யாய்இப் படியின் மீதுஓர் அணுவாய்க் கொசுவாய் அரிக்கும் புழுவாவ் பாம்பாய் மீனாய்ப் பறவையாய் மிருகமாய் மனிதனாய்ப் பூதமாய் வானுறை தேவனாய்த் தெய்வமாய்த் தோன்றித் திரும்பவும் அவ்வழி மண்ணாய் அணுவாய் மாறுதல் இயல்பாம், ஆதலின், புவிமீ துள்ள பொருள்கள் அனைத்தும் சுற்றம் போலத் தொடர்புடை யனவே. அஞ்ஞா னத்தில் அழுத்தி அழுந்தி தைந்து நொந்து நடுங்கி நிறமும் உழலும் மனிதர் உய்யும் வழியினைக் கண்டொரு மனிதன் காட்டிடின், அதனால் இவ் வையகம் முழுவதும் வாழ்வது திண்ணம். கல்லில் முன்னம் கரந்து கிடந்த எரியினைத் தட்டி எழுப்பி ஒருவன் காட்டிய நாள்வரை, அடுபிகால் மாரி வாடையில் மக்கள் வருந்தி நைந்தனர்; பருவ மறிந்து பயிர்செய் தொருவன் தானியம் எடுத்துத் தருவதன் முன்னம் உழுவை போல ைஉண்டு மனிதனும் உலகில் வாழ்ந்து வந்தனன். பாரிற் பேசிப் பழகும் மொழிதான் ஒருவன் நாவில் உருப்பெறும் முன்னம், ஏட்டில் எழுதும் எழுத்தின் வடிவை ஆராய்ந் தாராய்ந் துஅமைப்பதன் முன்னம், மனிதர். 158 155. 166 165- 170. 178
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/43
Appearance