உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்தார்த்தன் துறவு 43 ஊமைகள் போல உளறித் திரிந்தனர். கையால் சாடை காட்டி சுலைந்தனர். ஆழ்ந்து கண்ட அறிவி னாலும் ஓயா துழைக்கும் உழைப்பினாலும் தேர்த்து செய்யும் தியாகத் தாலும் அன்றிஓர் நன்மைஇவ் அகில மீது மனிதர்க்கு என்றும் வாய்த்ததும் உண்டோ? ஆதலின், 180 உடலின் உறுதியும் ஊக்கமும் உடையோன்-- பொருளும் புகழும் புத்தியும் உடைவோள், 185 காசினி யாளக் கருதுவ னேல்ஓர் மன்னர் மன்னனாய் வாழுதற் குரியோன், குலத்திற் பிறந்த குணந்திகழ் கோமான், வாழ்வில் ஓய்ந்து மனந்தள ராமல் அதன்; 190 இன்பத் துறையில் இறங்கி நிற்போன், விஞ்சிய காதல் விருந்தை அருந்தி அமையா தெங்கும் ஆசை யுடையான், நரையும் திரையும் மூப்பும் நண்ணி வெறுப்பு மிகுந்த விரக்த னாகாது 195 நன்மை தீமைஎத் தாளும் ஒன்றாய்க் கலந்து தங்கும்இக் காசினி மீது வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி யுடையோன், புவியில் அழகிய பொருளைத் தெரிந்து சொந்த மாக்கிடச் சுதந்திர முடையோன், 200 தனக்கென வாழாத் தரும சீலன்- என்றும் மக்கள் ஏத்துதற் குரிய மனிதன் ஒருவன் மண்ணில் தோன்றி அருளால் அனைத்தும் அறவே யொழித்து, இவ் வைய மீது மானிட ரெல்லாம் 205 உய்யும் வழியை உணர்த்தும் மந்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/44&oldid=1502300" இலிருந்து மீள்விக்கப்பட்டது