44 ஆசிய ஜோதி பாதலம் அதனில் பதுங்கிக் கிடப்பினும் இவ்வுல கத்தினில் யாரும் இதுவரை அஞ்ஞானத்தால் அறியா திருப்பினும், ஓய்வொழி வின்றி உழைத்திடு வானேல், எந்தா னாயினும் எவ்விடத் தாயினும் வெளியாம்; நன்கு-வினங்குதல் திண்ணம். தேடின கண்கள் தெரிசனம் செய்யும்; நடந்த கால்கள் நன்னிலம் சேரும்; பண்ணிய தியாகம் பழுதா காது; இவனே, காலளை வென்ற காவனும் ஆவான்; யான்இது செய்வேன்; யான்இது செய்வேன்; தியாகம் செய்யத் தேசமொன் றுண்டு அறித்த மக்களே ஆயினு மாருக; அறியா தவரே ஆயிறு மாகுக; செய்திடத் துணியும்இத் தியாக மதனால் எண்ணிலா மக்கள் இன்பம் அடைவர்; இந்நாட் டுள்ள யாவ குளத்தும் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பொடும் என்றன் உள்ளமும் ஓயாது ஒத்துத் துடிக்கும்; அழைத்து நிற்கும் அரிய சுடர்கணே! வருகில் றேன்இதோ! வருகின் றேன்இதோ! அழுது புலம்பி அரற்றும் புவியே! மகிழ்ந்து நீயும்மன் மக்களும் வாழ, என்குடி என்ைென என்வாழ்வு என்சுகம் என்இளம் பருவம் என்சிங் காதனம் யான்வாழ் அரண்மனை யாவும் வெறுத்தேன். விடை கொள்ளுதல் வெறுத்தற் கரிய விண்ணமு தே! என் அன்பின் உருவே! அசோதரை நங்காய்! 210 215 220 223 230 233
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/45
Appearance