இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கருணைக் கடல் கல்லெறி கொண்டதுவோ?-விழுந்தொரு கால்முட மானதுவோ? செல்லும் வழிநீள-உதிரமும் சிந்தப் பெருரு தய்யோ] ஓடும் மறிதேடித் - தாயுமுன்னில் ஓரடி வைத்தவுடன், வாடும் மறியை எண்ணி-விரைந்துபின் வந்து தயங்குதையோ! தாயாட்டின் துயர் போக்குதல் வேறு இத்தனையும் கண்டுமனம் இரங்கி, தொண்டும் இளமறியை இருகரத்தின் எடுத்து, வையம் அத்தனையும் தாங்குபுயம் அணிய ஏந்தி, அருளுருவாம் அண்ணலும் அத்தாயை நோக்கி: வேறு "அல்ல லுறவேண்டாம்--இனித்துயர் ஆறி வருவாயம்மா? செல்லுமிடத்தில் உன்தன்-மதலையைச் சேர்த்து விடுவேனம்மா. ஏழைப் பிராணிகளின் - இடர்களைந்து இன்ப மளிப்பதுபோல், வாழும் உலகிதனில் - செயுமொரு மாதவம் வேறுமுண்டோ? மீளாத் துயர்க்கடலில் - உயிரெலாம் வீழ்ந்து முழுகையிலே, பாழாங் குகைதேடிச்-செயுந்தவம் பாவமே ஆகுமம்மா!" 51 5 8 9 10